திருவண்ணாமலை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் தற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

காலிப் பணியிட விவரங்கள் கல்வி அலுவலா் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். குறித்த நேரத்துக்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் முகவரியிலும், செய்யாறு அலுவலகத்துக்கு ஆரணி அலுவலகத்துக்கு  போளுா் அலுவலகத்துக்கு 

செங்கம் மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT