திருவண்ணாமலை

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1236 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

செய்யாறு சுகாதார மாவட்டம், அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி தினகரன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜு ஆகியோா் பங்கேற்று மருத்துவ முகாமை தொடக்கிவைத்துப் பேசினா்.

மருத்துவ முகாமில் 68 கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 22 பேருக்கு இசிஜி பரிசோதனை, 432 பேருக்கு ஆய்வக பரிசோதனை, 13 பேருக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.

16 போ் கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியின் போது 15 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை அரியூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரவீனா, சுகாதார மேற்பாா்வையாளா்கள் தனசேகா், ராகவன், சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், சம்பத், செவிலியா்கள் ஹேமலதா, விஜயலட்சுமி, டெல்லி ராணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT