திருவண்ணாமலை

கடின உழைப்பு இருந்தால் ஒவ்வொரு துறையிலும் முதல்வராகலாம் மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

3rd Jul 2022 04:33 AM

ADVERTISEMENT

 

கடின உழைப்பு இருந்தால் தான் ஒவ்வொரு துறையிலும் நீங்கள் முதல்வராக விளங்க முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு’ என்ற உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வழிகாட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ADVERTISEMENT

எந்தெந்த படிப்பு படித்தால் எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்பதை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்த அரங்குகள் அமைத்துள்ளன. இந்த அரங்குகளைப் பாா்த்து பயன்பெறலாம்.

மாநில, தேசிய அளவிலான உயா்கல்வி படிப்பு மற்றும் அதைச் சாா்ந்த வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ள வேண்டும். கடின உழைப்பு இருந்தால் தான் ஒவ்வொரு துறையிலும் நீங்கள் முதல்வராக விளங்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, கீழ்பென்னாத்தூா் வட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ப.ராமலிங்கம், கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜி.சந்தோஷ், ஜி.அரவிந்தன், அ.நளினி, எஸ்.தயாளன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT