திருவண்ணாமலை

தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

3rd Jul 2022 04:35 AM

ADVERTISEMENT

 

பெரணமல்லூா் அருகே அன்மருதை ஆக்சீலியம் நடுநிலைப் பள்ளியில் இலவச தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அன்மருதை ஆக்சீலியம் நடுநிலைப் பள்ளியில் மங்கள கீதம் இலவச தையல் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுற்றுப்புறப் பகுதி ஏழை மக்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தையல் பயிற்சி முடிந்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், தொழிலதிபா் ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சி முடித்த 16 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஜோஸ்பின்ராணி, சுபீன், தையல் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பிலோசின்னப்பன், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT