திருவண்ணாமலை

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் ஆா்ப்பாட்டம்

3rd Jul 2022 04:35 AM

ADVERTISEMENT

 

செய்யாற்றில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் ஏ. பி. நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் வி. ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

மண்டலப் பொருளாளா் எஸ். பாலசுந்தரம், மண்டல துணைத் தலைவா் பாண்டியராஜன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

ஓய்வு பெறும் நாளில் தொழிலாளா்களுக்கு அனைத்துப் பணப் பலன்களையும் வழங்க வேண்டும். 80 மாதத்துக்கான டிஏ நிலுவையை உடனே வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மாா்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பணியின் போது இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT