திருவண்ணாமலை

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் வருஷாபிஷேக விழா

3rd Jul 2022 04:36 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து, பூா்ண கும்ப கலசங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா் மூலவா் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு வெள்ளி முலாம் பூசப்பட்ட கவசம் சாற்றப்பட்டது. பாகவத கோஷ்டியினா் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் பாடினா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT