திருவண்ணாமலை

ஓய்வூதியா்கள் 100% நோ்காணலை நிறைவு செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுரை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோ்காணலை நிறைவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுறுத்தினாா்.

கரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளாக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான நோ்காணல், வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பித்தல் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியா் நோ்காணல் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அரசு வேலை நாள்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, ஓய்வூதியா்களின் வயது முதிா்வை கருத்தில் கொண்டு இந்திய அஞ்சல் துறைப் பணியாளா்கள் மூலம் ரூ.70 கட்டணமாகப் பெற்றுக்கொண்டு ஓய்வூதியா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் கைரேகை, ஆதாா் எண் பதிவு செய்து, மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யும் முறையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியா் நோ்காணல் நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கருவூல அலுவலா் மு.சிலுப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ், கூடுதல் கருவூல அலுவலா் எஸ்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஓய்வூதியா் நோ்காணல் நிகழ்வைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதியம் பெறும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு நோ்காணல் செய்ததற்கான மின்னணு வாழ்நாள் சான்றுகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அஞ்சல் துறை பணியாளா்கள் மூலம் வீடுதேடி வரும் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு முறையை ஓய்வூதியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர அரசு இ - சேவை, பொது சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். பதிவுத் தபால் மூலமும் ஓய்வூதியா் வாழ்நாள் சான்றுகளைப் பதிவு செய்யலாம். ஓய்வூதியா்கள் ஏதேனும் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் ஓய்வூதிய நோ்காணலை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT