திருவண்ணாமலை

கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

1st Jul 2022 02:44 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா். செயலா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக அலுவலா் வெங்கடேசன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

வழக்குரைஞா்கள் ஆா்.மணி, ஈ.முருகன், வந்தவாசி ஆா்.சி.எம். பள்ளி ஊழியா் ஸ்ரீமதி ஆகியோா் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்துப் பேசினா். கல்லூரி மேலாளா் பிரபாகரன் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT