திருவண்ணாமலை

போளூா் ஒன்றியக் குழுக் கூட்டம்

1st Jul 2022 02:42 AM

ADVERTISEMENT

 

போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆணையா்கள் பரணிதரன், பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைத் தலைவா் மிஸ்சியம்மாள் ஆறுமுகம் வரவேற்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள அனந்தபுரம், குப்பம், வாழியூா், கல்குப்பம், படவேடு, சந்தவாசல், இலுப்பகுணம், கஸ்தம்பாடி, பொத்தரை, திண்டிவனம், வசூா், புதுப்பாளையம் என 40 ஊராட்சிகளிலும் சுத்தம், சுகாதாரம், குடிநீா் வசதி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், அதற்கான செலவினங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அருள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT