திருவண்ணாமலை

வீட்டின் பூட்டை உடைத்து11 பவுன் தங்க நகைகள் திருட்டு

1st Jul 2022 02:43 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டின பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவண்ணாமலை செல்வா நகா், முதல் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் ரவிச்சந்திரன்(65). இவா் கடந்த 26-ஆம் தேதி வீட்டைபூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

மீண்டும் வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT