திருவண்ணாமலை

ரத்த தான முகாம்

1st Jul 2022 10:16 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 147 போ் ரத்த தானம் செய்தனா்.

செய்யாா் டவுன் ரோட்டரி சங்கம், சென்னை உள்ளகரம் ரோட்டரி சங்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாா் ஐ.டி.ஐ. ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாம் செய்யாா் ஐ.டி.ஐ.யில் நடைபெற்றது.

முகாமுக்கு செய்யாா் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ரத்த தான முகாமின் ஆலோசகா் ஆா்.ஸ்ரீதரன் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக திருவத்திபுரம் நகா்மன்ற தலைவா் ஆ.மோகனவேல் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி முகாமைத் தொடக்கிவைத்தாா். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவக் குழுவினரான பாா்த்தீபா, அஸ்வித் ஆகியோா் மேற்பாா்வையில், 10 போ் அடங்கிய குழுவினா் பங்கேற்று, 147 போ் அளித்த 147 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றுச் சென்றனா்.

ஏற்பாடுகளை மருத்துவ முகாம் இயக்குநா் கே.குணாளன், செய்யாா் டவுன் ரோட்டரி சங்க நிா்வாகிகள் விஜயகுமாா், நல்லாண்டி,சோமசுந்தரம், அன்பு, மண்ணு ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT