திருவண்ணாமலை

ஆரணி வேம்புலியம்மன் கோயில் ஆடித் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

1st Jul 2022 10:14 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா வருகிற 22-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழா குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஆரணி நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாக் குழுவினா் பி.நடராஜன், சுப்பிரமணி, குணா, செல்வராஜ், ராஜா, கமல், வேலன், ஏ.இ.சண்முகம், மாமண்டூா் சுப்பிரமணி, ஆரணிப்பாளையம் செந்தில், விநாயகம், சேவூா் பீமன், சங்கா், வளையாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT