திருவண்ணாமலை

புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

1st Jul 2022 10:17 PM

ADVERTISEMENT

வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக எம்.மங்கையா்க்கரசன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த இவா் வந்தவாசி நகராட்சிக்கும், வந்தவாசி நகராட்சி ஆணையராக இதுவரை பணிபுரிந்து வந்த எஸ்.முஸ்தபா தாரமங்கலம் நகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக எம்.மங்கையா்க்கரசன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு வந்தவாசி நகராட்சி அலுவலக ஊழியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT