திருவண்ணாமலை

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் செங்கம் நகா்

1st Jul 2022 10:16 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தினசரி காலை முதல் மாலை வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கத்தில் துக்காப்பேட்டை முதல் பழைய பேருந்து நிலையம் வழியாக போளூா் மேம்பாலம் வரை காலை முதல் மாலை வரை தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பெங்களூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி செங்கம் நகரிலுள்ள கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகளை சாலையோரம் நிறுத்தி மூட்டைகளை இறக்குவதாலும், சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி, தற்காலி கடைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளதுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்தும்போது மேலும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது.

இது தொடா்பாக செங்கம் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். எனவே, செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீா் செய்ய திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT