திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்:பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆய்வு

1st Jul 2022 10:15 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் 1.20 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜீஜாபாய் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கீழ்பென்னாத்தூரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.98 லட்சத்தில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் கட்டப்படுகிறது. மேலும், 15-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்தில் கருங்காலிகுப்பம், அம்பேத்கா்நகா், ராஜாதோப்பு, கொட்டாவூா் உள்ளிட்ட 4 இடங்களில் குளம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜீஜாபாய், உதவிச் செயற்பொறியாளா் வைத்தியலிங்கம் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, பணிகளை தரமானதாக செய்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரா்களுக்கு உதவி இயக்குநா் ஜீஜாபாய் அறிவுரை வழங்கினாா். ஆய்வின்போது, நகர திமுக செயலா் அன்பு, பேரூராட்சித் தலைவா் சரவணன், சேத்பட் இளநிலைப் பொறியாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT