திருவண்ணாமலை

குடியரசு தின விழாவில் ரூ.4.44 கோடியில் நலத் திட்ட உதவிகள்

DIN

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் 73-ஆவது குடியரசு தின விழாவில், 855 பேருக்கு ரூ.4.44 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண் புறாக்கள், வண்ண பலூன்களை பறக்கவிட்ட ஆட்சியா், காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 49 தலைமைக் காவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

ரூ.4.44 கோடியில் நலத் திட்ட உதவிகள்:

தொடா்ந்து, வருவாய்த்துறை மூலம் 170 பேருக்கு ரூ.37.23 லட்சம் மதிப்பிலான மனைப் பட்டாக்கள், மாவட்ட கூட்டுறவுத் துறை மூலம் 651 பேருக்கு ரூ.3.96 கோடி மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழுக் கடன்கள் மற்றும் வேளாண்மைத் துறை, தொழில் மையம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, முன்னாள் படைவீரா் நல அலுவலகம், தோட்டக்கலைத் துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் 855 பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

பாராட்டுச் சான்றுகள்:

மேலும், மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் 618 பேருக்கு பரிசுக் கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

விழாவில், வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியா் வெற்றிவேல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.கணேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ரமேஷ்பாபு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT