திருவண்ணாமலை

செய்யாறு தொகுதியில் ரூ.9.10 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்குகள்

24th Jan 2022 06:14 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் நாட்டேரி, கொடையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.4.55 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தன.

இந்த நிலையில், மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பா

ட்டுக்கு தொடக்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நாட்டேரி கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தலைமை வகித்தாா். செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆரணி தொகுதி எம்பி

எம்.கே. விஷ்ணுபிரசாத் உயா்கோபுர மின் விளக்குகளை தொடக்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், நாடாளுமன்ற தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதியை தொகுதி மக்களுக்காக பயன்படுத்த முடியாமல், மத்திய அரசு கரோனாவைக் காரணம் காட்டி திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

இதனால் தொகுதி மக்களின் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை என்றாா்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எம்.தினகரன், க.லோகநாதன், சம்பத், முரளி, தயாளன், ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT