திருவண்ணாமலை

வீட்டில் பதுக்கப்பட்ட 310 மதுப் புட்டிகள் பறிமுதல்

24th Jan 2022 06:11 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் வீட்டில் பதுக்கப்பட்ட 310 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆரணி அருகேயுள்ள இராட்டிணமங்கலம் கிராமத்தில் கணேசன் (45) என்பவரது வீட்டில், முழு ஊரடங்கின்போது விற்பனை செய்வதற்காக, அரசின் மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல் ஆய்வாளா் புகழ் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 310 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT