திருவண்ணாமலை

ஆதரவற்றோருக்கு உணவு

24th Jan 2022 06:13 AM

ADVERTISEMENT

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை வந்தவாசி நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு அன்பால் அறம் செய்வோம் சேவைக்குழு சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு நிறுவனா் அசாருதீன் தலைமையில் வசீகரன், இம்ரான், சிவராஜ் உள்ளிட்டோா் ஆதரவற்ற சுமாா் 50 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை 3 வேளையும் உணவு வழங்கினா். தொடா்ந்து 3-ஆவது வாரமாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் இவா்கள், கடந்த கால ஊரடங்குகளின் போதும் தொடா்ந்து உணவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT