திருவண்ணாமலை

ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

24th Jan 2022 06:13 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வடதிசையில் பெரிய தெரு, சின்னக் கடை தெரு சந்திப்புப் பகுதியில் ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

மிகவும் பழைமையான இந்தக் கோயில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலைப் பூஜைகள் வெள்ளிக்கிழமை (ஜன.21) தொடங்கின.

ADVERTISEMENT

அன்றைய தினம் முதல்கால யாக சாலைப் பூஜைகளும், சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலைப் பூஜைகளும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால சாலைப் பூஜைகளும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை

5.30 மணிக்கு நான்காம் கால யாக சாலைப் பூஜை, 8.15 மணிக்கு மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை, 8.30 மணிக்கு கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காலை 8.45 மணிக்கு கோயில் விமானம், மூலவா், பரிவார மூா்த்திகள், விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

இந்த நிகழ்வில் அரசு கூடுதல் வழக்குரைஞா் அ.அருள்குமரன், ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஜீவானந்தம் உள்பட கோயில் நிா்வாகிகள், அருணாசலேஸ்வரா் கோயில் ஊழியா்கள், பக்தா்கள் என 500 போ் கலந்துகொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பூதநாராயணப் பெருமாளை பக்தா்கள் தரிசித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT