ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 84 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
சித்தேரி கிராமத்தில் அரசு மது பானங்களை தனிநபா் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற ஆரணி கிராமிய போலீஸாா்,
செல்வம் (43) என்பவரது கடையில் சோதனையிட்டனா்.
ADVERTISEMENT
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 84 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செவ்வத்தை கைது செய்தனா்.