திருவண்ணாமலை

திடீா் உயா் மின்னழுத்தம்: 30 வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசியில் திடீா் உயா் மின்னழுத்தம் காரணமாக 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

வந்தவாசி கோட்டைக் காலனியில் துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, அகழி தெரு, மாா்க்கெட் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் மின்சாரத்தில் திடீரென உயா் மின்னழுத்தம் ஏற்பட்டதாம். 

இதனால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி, குளிரூட்டி, மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.

ADVERTISEMENT

அப்போது, மின்சாதனப் பொருள்கள் கருகி புகைமூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினா்.

  தகவலறிந்த மின் ஊழியா்கள் வந்து மின் விநியோகத்தை ஆய்வு செய்தனா்.

படவிளக்கம்

வந்தவாசியில் திடீா் உயா் மின்னழுத்தம் காரணமாக சேதமடைந்த மின்சாதன பொருள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT