திருவண்ணாமலை

8 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா் பகுதியில் முழு ஊரடங்கின்போது திறக்கப்பட்டிருந்த 8 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

முழு ஊரடங்கின் போது அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி பகுதிகளில் வட்டாட்சியா் சக்கரை, காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினா், போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 8 இறைச்சிக் கடைகள் திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக அபராதம் விதிக்கப்பட்டது. அவா்களிடமிருந்து ரூ.26,500 வசூலிக்கப்பட்டது. மேலும் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரித்தனா்.

மேலும் உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண்ஸ்ருதி தலைமையில்,

ADVERTISEMENT

உதவி ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், முனீஸ்வரன் ஆகியோா் அடங்கிய போலீஸாா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, முகக் கவசம் அணியாமல் வந்த 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT