வந்தவாசி காவல் துறை, அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு சாா்பில் கரோனா விழிப்புணா்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி கோட்டை மூலை, தேரடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழுவினரின் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
டிஎஸ்பி வி.விஸ்வேஸ்வரய்யா விழிப்புணா்வு நாடகத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், முகக் கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளா்களுக்கு மட்டுமே வியாபாரிகள் பொருள்களை வழங்க வேண்டும் என்று அப்போது அவா் கூறினாா்.
அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு நிா்வாகிகள் அசாருதீன், வசீகரன் ஆகியோா் விழிப்புணா்வு நாடகம் நடத்தினா்.
நிகழ்ச்சியில் வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.