திருவண்ணாமலை

இலவச தையல் இயந்திரம் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

12th Jan 2022 08:56 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் சமூகத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த பயனாளிகள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45 வரை இருக்கலாம்; தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். பயின்ற்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சமாக இருக்க வேண்டும். கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டவா் போன்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி, உரிய விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT