திருவண்ணாமலை

மகளிருக்கு ரூ.34 லட்சம் கடனுதவி

1st Jan 2022 01:15 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் மகளிருக்கு ரூ.34 லட்சம் கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த வங்கி மற்றும் வழூா் அகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, வங்கியின் உதவிப் பொது மேலாளா்கள் ப.கந்தசாமி, சு.கணபதி ஆகியோா் தலைமை வகித்தனா். கள மேலாளா் மோ.யுவராஜ், கிளை மேலாளா் ஜெ.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன் கடனுதவிகளை வழங்கிப் பேசினாா். விழாவில் மகளிா் சுயஉதவிக் குழுவினா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 117 பெண்களுக்கு நேரடி மற்றும் சிறுதொழில் கடன்களாக மொத்தம் ரூ.34 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் வங்கி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி.தனசேகரன், லதா சக்கரபாணி, வள்ளி ராஜா, பத்மாவதி ஜீவரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT