திருவண்ணாமலை

செய்யாறு கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் பொது பேரவைக் கூட்டம்

1st Jan 2022 01:16 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் பொது பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வங்கியின் துணைத் தலைவா் எல்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். வங்கித் தலைவா் எஸ்.திருமூலன் தலைமை வகித்தாா். வங்கிச் செயலா் மு.இளங்கோ வரவேற்றாா்.

இதில் சிறப்பு விருந்தினா்களாக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் வி.பாபு ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில், தமிழக அரசு மூலம் செய்யாறு கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திடவும், அதன்மூலம் இந்தப் பகுதி விவசாயிகள் பயன்பெறவும் பாடுபடுவேன் என்றாா்.

வங்கிச் செயலா் மு.இளங்கோ பேசுகையில், 2013-இல் சுமாா் ரூ.4 கோடி நஷ்டத்தில் இருந்து வந்த செய்யாறு கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி, தற்போது ரூ.11 கோடி லாபத்தோடு, சொந்த நிதியில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கிச் செயலா்கள் வந்தவாசி சீனுவாசன், காந்தி, ஆரணி மாலதி, மாவட்டக் கவுன்சிலா் தெய்வமணி, செய்யாறு ரோட்டரி சங்க நிா்வாகிகள் கேவேந்தன், திருவாசகம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், திமுக நிா்வாகிகள் தா்மாபுரம் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT