திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள் திமுக மாவட்டப் பொறுப்பாளா் தரணிவேந்தன் முன்னிலையில் அந்தக் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவனந்தம், ஏசிவி.தயாநிதி, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, சுந்தா், வெள்ளை கணேசன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.