திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த நாகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை, ஆட்டோ ஓட்டுநா்.
இவரது மகன் பிரதீஷ் (8), அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை விவசாயக் கூலி வேலைக்குச் சென்றஅவரது பாட்டியை தேடிச் சென்றுள்ளாா்.
பின்னா், இவா் வீடு திரும்பவில்லை; இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே, நாகப்பாடி சடையன் என்பவரது விவசாயக் கிணற்றில் சிறுவன் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் புதுப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் சென்று பாா்த்தபோது, காணாமல் போன ஏழுமலை மகன் பிரதீஷ் என்பது தெரியவந்தது.
தீயணைப்புப் படையினா் உதவியுடன் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து புதுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.