திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சிகளில் 3 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் திமுக வசமாகின. வந்தவாசி நகராட்சியில் 10 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.
நகராட்சிகள்: திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 4 நகராட்சிகள் உள்ளன.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வாா்டுகளில் திமுக 31 இடங்களிலும், ஆரணி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 12 இடங்களிலும், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 18 இடங்களில் திமுக வென்று 3 நகா்மன்றத்தையும் திமுக கைப்பற்றுகிறது.
பேரூராட்சிகள்: கண்ணமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 இடங்களிலும், களம்பூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 9 இடங்களிலும், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 8 இடங்களிலும், செங்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 8 இடங்களிலும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 10 இடங்களிலும், தேசூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில் 6 இடங்களிலும், புதுப்பாளையம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில் 9 இடங்களிலும், பெரணமல்லூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில் 5 இடங்களிலும், போளூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 12 இடங்களிலும், வேட்டவலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 8 இடங்களிலும் திமுக வென்று அனைத்து பேரூராட்சிகளையும் கைப்பற்றியது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் அதிகப்படியான இடங்களில் திமுக வென்றுள்ளதன் மூலம் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது.