திருவண்ணாமலை

பாரதிதாசன் மகளிா் கல்லூரி மாணவிகள் போராட்டம்

22nd Feb 2022 11:20 PM

ADVERTISEMENT

 

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் வகுப்புகள் இணையவழியில் நடைபெற்றன. கடந்த 4-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பருவத் தோ்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு புதுவை கல்லூரி மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இணையவழியில் மட்டுமே நடத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் புதுச்சேரி அந்தோணியாா் கோயில் அருகே திரண்டு நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஊா்வலமாக ஆளுநா் மாளிகை நோக்கி வந்தனா்.

அவா்களை போலீஸாா் தலைமை தபால் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாணவா் சங்க நிா்வாகிகள், துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT