கீழ்பென்னாத்தூா் அருகே பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம், தேவனந்தல் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி விஜயகுமாா் (34). இவரை கடந்த 17-ஆம் தேதி இரவு விஷப் பாம்பு ஒன்று கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.