திருவண்ணாமலை நகராட்சி 25-வது வாா்டில் திங்கள்கிழமை (பிப்.21) மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நகராட்சி, 25-வது வாா்டு உறுப்பினா் பதவிக்கான மறு வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
வாக்குச்சாவடி 57 (ஆண்கள்), 57 (பெண்கள்) ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு உள்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்கலாம்.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா அறிகுறி உள்ளவா்கள் மற்றும் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.
வாக்காளா்களுக்கு இடது கை விரலில் அழியாத மை வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
வாக்குச்சாவடி மையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
பள்ளி நுழைவு வாயிலிருந்து பல்வேறு இடங்களில் அதிநவீன சுழல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் தவிர அரசியல் கட்சியினா் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.