திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

17th Feb 2022 11:18 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேத்துப்பட்டு வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், பெரணமல்லூரை அடுத்த நாராயணமங்கலம் கிராமம் அருகே வியாழக்கிழமை மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகைளை நிறுத்த முயற்சித்தனா்.

இதை அறிந்த மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

ADVERTISEMENT

அதிகாரிகள் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து பெரணமல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT