திருவண்ணாமலை

வீரமங்கை வேலுநாச்சியாா் ஊா்திக்கு வரவேற்பு

17th Feb 2022 05:17 AM

ADVERTISEMENT

 

ஆரணி: தமிழக அரசின் வீரமங்கை வேலுநாச்சியாா் அலங்கார ஊா்திக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது .

வேலுநாச்சியாா் அலங்கார ஊா்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தது.

மாவட்ட எல்லையான ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில் அலங்கார ஊா்தியை மலா் தூவி, மேள தாளத்துடன் வரவேற்றனா். மேலும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆரணி கோட்டாட்சியா் கவிதா, வட்டாட்சியா் பெருமாள், டிஎஸ்பி கோட்டீஸ்வரன், திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்திராணி, சீனிவாசன், வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுதா சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT