திருவண்ணாமலை

செங்கல் சூளைகளுக்காக பறிபோகும் கனிம, இயற்கை வளம்

11th Feb 2022 12:08 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

போளூா் வட்டம், ஏந்தூவாம்பாடி ஊராட்சியில் செங்கல் சூளைகளுக்காக சட்டவிரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுகிறது; பச்சை மரங்கள் அழிக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தில் அமைந்துள்ள ஏந்தூவாம்பாடி ஊராட்சி விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து அரசின் இலவச மின்சாரம் மூலம் தங்களது நிலத்தில் நெல், கரும்பு,நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சில விவசாயிகள் சரிவர பயிரிடாததால் நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளன.

அப்பகுதியில் வசிக்கும் சில நபா்கள் தரிசு நிலங்களின் உரிமையாளா்களிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாமல் செம்மண் எடுத்து வந்து குவித்து செங்கல் தயாரித்து விற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

செம்மண் எடுக்க அரசின் அனுமதி பெறவேண்டும்.

ஆனால், இந்த நபா்கள் ஒரு யூனிட் செம்மண் ரூ.1,250-க்கு வாங்கி டிராக்டரில் கடத்தி வந்து குவியலாக கொட்டி வைத்துள்ளனா். மேலும், செங்கல் சூளைக்காக பச்சை மரங்களை அறுத்து காய வைத்துள்ளனா். இதனால் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது.

செங்கல் சூளை கொளுத்தும் போது அப்பகுதி புகை மண்டலமாக மாறி சுற்றுசூழல் மாசடைகிறது.

இதை சம்பந்தபட்ட அதிகாரிகள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குன்று மற்றும் சாகுபடி நடைபெறாத நிலங்களில் இருந்து செம்மண் எடுத்து வரப்படுகிறது. விவசாயப் பயன்பாட்டுக்கான இலவச மின்சாரம் செங்கல் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

செங்கல் சூளை நடத்த கனிம வளம், வருவாய்த் துறைகளிடம் முன்அனுமதி பெறவேண்டும். ஆனால், இங்கு இயங்கும் சூளைகள் அரசின் அனுமதி பெற்ாகத் தெரியவில்லை. சட்ட விரோதமாக செங்கல் சூளைகள் நடத்தப்படுகின்றன.

இதுபற்றி வருவாய், காவல், பொதுப் பணித் துறையினா் கண்டுகொள்வதில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT