திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.60 லட்சம்

11th Feb 2022 12:06 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.60 லட்சம் ரொக்கம், 236 கிராம் தங்கம், 551 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு உள்ளூா், வெளியூா்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, பக்தா்கள் செலுத்தும் காணிக்கைப் பணம் எண்ணும் பணி மாதம்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

கோயில் ஊழியா்கள், பக்தா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்தப் பணியின் இறுதியில் ரூ.60 லட்சத்து 9 ஆயிரத்து 536 ரொக்கம், 236 கிராம் தங்கம், 551 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT