திருவண்ணாமலை

கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

10th Feb 2022 01:32 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள கல்லூரி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கல்லூரியில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.

இவா்கள் தங்களது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தங்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

12 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

பெண்கள் மகப்பேறு விடுப்பை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT