செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன தொழிலாளி உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் செட்டிக்குளம் பள்ளத் தெருவைச் சோ்ந்தவா் மலா்வண்ணன் (38). தனியாா் பீரோ தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இவா், புதன்கிழமை செய்யாற்றில் உறவினா் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அன்று மாலையே வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் பாண்டியம்பாக்கம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிப்பா் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மலா்வண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.