வந்தவாசியை அடுத்த பொன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் இளங்காடு கிராமத்தில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் சென்றனா்.
அந்தப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், 7 தின சிறப்பு முகாம் இளங்காடு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
ஊா்வலத்தை செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன் தொடக்கிவைத்தாா். பள்ளிஆசிரியா்கள் ஹேமலதா, சிவராமன், நூலகா் சண்முகம், எக்ஸ்னோரா செயலா் கு.சதானந்தன், கலாம் கனவு அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். கிராம முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் சென்றது. நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஏ.பத்மநாபன் நன்றி தெரிவித்தாா்.