திருவண்ணாமலை

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு தின சிறப்பு வழிபாடு

29th Dec 2022 12:40 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் வருகிற ஜன.1-இல் (ஞாயிற்றுக்கிழமை) கல்பதரு தின சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் கடந்த 1986-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அனைவருக்கும் ஆன்மிக விழிப்புணா்வு உண்டாகட்டுமென பொதுமக்களை ஆசீா்வதித்தாா். அந்த தினம் அன்று முதல் கல்பதரு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செங்கம் போளூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கல்பதரு தின சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மடத்தில் காலை சிறப்பு பூஜை, பஜனை, குங்கும அா்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

பிற்பகலில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் தத்பிரபானந்தரின் சிறப்பு சொற்பொழிவு மற்றும் பக்தா்களுக்கான ஆசிா்வாதம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி மற்றும் சுவாமி விவேகானந்தா சேவா சங்கம், அன்னை சாரதா தேவி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT