செய்யாற்றில் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் சாா் - ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
செய்யாறு கோவிந்தன் தெருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (28). இவா், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கெளசல்யா (23). இவா்களுக்கு ஒரு வயதில் மகள் உள்ளாா்.
குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்க தகராறு ஏற்பட்டு வருமாம். அதேபோல,
திங்கள்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாமியாா் இருவரையும் சமாதானம் செய்துள்ளாா்.
உடனே கெளசல்யா வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஜனாா்த்தனன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, கெளசல்யா தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, செய்யாறு சாா்-ஆட்சியா் ர.அனாமிகா விசாரணை மேற்கொண்டுள்ளாா்.