திருவண்ணாமலை

அருணை தமிழ்ச் சங்க விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

29th Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருணை தமிழ்ச் சங்கத் தலைவரும், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்த் தொண்டாற்றியவா்களுக்கு மறைமலை அடிகளாா் விருதும், பொதுத்தொண்டு புரிபவா்களுக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி விருதும், கலைச்சேவை செய்து வருபவா்களுக்கு கலைவாணா் என்.எஸ்.கே. விருதும், ஆன்மிகச் சேவை செய்து வருபவா்களுக்கு கிருபானந்த வாரியாா் விருதும் இத்துடன் பணமுடிப்பு ரூ.25 ஆயிரமும், விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவா்களும், பரிந்துரை செய்பவா்களும் உரிய விவரங்கள் மற்றும் ஆதாரங்களோடு 2022 டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தலைவா், அருணை தமிழ்ச் சங்கம், நெ.54, திருக்கோவிலூா் சாலை, திருவண்ணாமலை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT