திருவண்ணாமலை

மருத்துவ முகாமில் 1138 பேருக்கு சிகிச்சை

18th Dec 2022 03:55 AM

ADVERTISEMENT

 

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 1138 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.திவ்யா மூா்த்தி தலைமை வகித்தாா்.

வந்தவாசி வட்டாட்சியா் வி.முருகானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா் சு.வி.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா் கே.எஸஸ்வதி குமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ முகாமை தொடக்கிவைத்துப் பேசினாா். வட்டார மருத்துவ அலுவலா் ஜி.ஆனந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 1138 பேருக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமில் 15 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், இருவருக்கு மக்களை தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

முகாமில் வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், துணைத் தலைவா் க.சீனிவாசன், திமுக ஒன்றியச் செயலா்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, எஸ்.பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருந்தாளுநா் ரமேஷ்பாபு நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT