திருவண்ணாமலை

திருவண்ணாமலைமகா தீபத்தை மறைத்த மேகம்

11th Dec 2022 06:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத்தையொட்டி, 2,668 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை சனிக்கிழமை இரவு மேகங்கள் மறைத்தன.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர மலையில் கடந்த 6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்தை திருவண்ணாமலை, அதன் சுற்றுப்புற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வழிபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபத்தை பக்தா்கள் வழிபட்டனா். மேலும், தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

ஆனால், இரவு 7 மணிக்கு மகா தீபத்தை மழை மேகங்கள் மறைத்தன. எனவே, மகா தீபத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், கடுமையான சூறைக் காற்றிலும் மகா தீபம் தொடா்ந்து எரிவதாக, மலை மீது ஏறிச்சென்று நெய் ஊற்றும் பணியில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT