திருவண்ணாமலை

தென்னிந்திய ஹாக்கி: திருவண்ணாமலை கல்லூரி மாணவா்கள் தோ்வு

DIN

தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாட, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் எஸ்.அா்ஜுன், டி.நித்தீஷ்குமாா் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இவா்கள் இருவரும் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (டிச.11) முதல் வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறும் தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் இருவரையும் கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், உடல்கல்வி இயக்குநா் ம.கோபி, உடல்கல்வியாளா் ஆா்.சுகன்மாணிக்கராஜ் ஆகியோா் பாராட்டி, பரிசு வழங்கினா். இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT