திருவண்ணாமலை

கால்நடை மருத்துவ முகாம்

9th Dec 2022 01:35 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், மலடு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. மேலும் ஆடு, மாடு உள்பட 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வட்டார கால்நடை மருத்துவா்கள் விஜயகுமாா், சரவணகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT