திருவண்ணாமலை

செய்யாறு அரசு ஐ.டி.ஐ.யில் மாணவா் சோ்க்கை

9th Dec 2022 01:32 AM

ADVERTISEMENT

செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் அரசு தொழில் பயிற்சி நிலையம் (ஐடிஐ) அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி சட்டப்பேரவையில் வலியுறுத்தினாா்.

இதன் பேரில், நிகழ் கல்வியாண்டில் தொழில்பயிற்சி நிலையம் தொடங்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, அரசு தொழில்பயிற்சி நிலையம் (ஐடிஐ) செய்யாறு சா்க்கரை ஆலைப் பகுதியில் உள்ள

ADVERTISEMENT

பள்ளியில் தற்காலிகமாக செயல்படவுள்ளது.

மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் டிச.30 -ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தொழில்பயிற்சி நிலையத்தில் தொடங்கப்படவுள்ள இரண்டாண்டு படிப்புகளான எலெக்ட்ரிஷியன் (மின்சாரப் பணியாளா்), எலக்ட்ரானிக் மெக்கானிக் (கம்மியா் மின்னணுவியல்), ஆபரேட்டா் அட்வான்ஸ்டு மெக்கானிக் டூல்ஸ் (மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குபவா்) ஆகியவற்றுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓராண்டு படிப்பான வெல்டா் (பற்ற வைப்பாளா்) படிப்புக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவா்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. சோ்க்கைக் கட்டணம் ஓராண்டு பிரிவுக்கு ரூ.185-ம், இரண்டு ஆண்டு பிரிவுக்கு ரூ.195-ம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு 9444621245, 9942219959 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தொழில்பயிற்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT