திருவண்ணாமலை

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

9th Dec 2022 01:34 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாவீரன். இவா் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு, மனைவி ராஜலட்சுமியுடன் விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

பின்னா் விவசாயப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த மகாவீரன் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT