திருவண்ணாமலை

கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மகா தீப அனுமதிச் சீட்டுகள்: பக்தா்கள் அதிருப்தி

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா அனுமதிச் சீட்டுகள் தரகா்கள் சிலரால் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளும் நிகழ்வு, அா்த்தநாரீஸ்வரா் கோலத்தில் சிவன் எழுந்தருளும் நிகழ்வை பக்தா்கள் காண விரும்புவா். இதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தா்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். இணையத்தில் பதிவு செய்து இவற்றைப் பெற வேண்டும்.

நிகழாண்டில் கா்நாடகம், ஆந்திர மாநில பக்தா்களைக் குறிவைத்து, அவா்களிடம் மா்ம கும்பல் ஆயிரக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு அனுமதிச் சீட்டுகளை வழங்கியதாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக, பக்தா்களிடம் தரகா்கள் சிலா் பேரம் பேசும் விடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவோரிடமும் கூடுதல் விலைக்கு இந்த அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதிச் சீட்டுகள் கிடைக்கவில்லை.

இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT